search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்சதை"

    • அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
    • அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள்.

    சென்னை:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.

    நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி விபரங்களை கிராமங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதோடு அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    இதற்காக அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்சதையை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி சேத்துப்பட்டு ஆரிங்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பள்ளியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் விசுவ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கிறார்கள்.

    அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள். ஏற்கனவே 85 லட்சம் குடும்பத்தினர் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர்.

    ×