என் மலர்
நீங்கள் தேடியது "Yuvraj Khatri"
- நேபாளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது.
- விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் நேபாளம் அணியின் சுழற்பந்து வீச்சாளர் காயமடைந்தார்.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இதில் 5-வது லீக் ஆட்டத்தில் நேபாளம் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 141 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணி 28.4 ஓவரில் 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் நேபாளம் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவராஜ் காத்ரி காயமடைந்தார்.
வங்கதேச அணி வீரர் ஃபரித் ஹசன் 13 ரன்னில் யுவராஜ் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அப்போது விக்கெட்டை கொண்டாடும் விதமாக தனது ஷீவை போன் பேசுவதுபோல வைத்து கொண்டாடினார். அடுத்த வந்த ரிசான் ஹொசான் கோல்டன் டக் ஆகி யுவராஜ் பந்தில் அவுட் ஆனார்.
இதனால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக துள்ளிக் குதித்து ஓடினார். சக வீரருடன் கைதட்டி கொண்டாடிய போது காலை சரியாக உன்ற முடியாமல் பிரண்டது. வலியால் துடித்த அவரை சக வீரர்கள் ஓய்வு அறைக்கு தூக்கி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yuvraj Khatri is new spin bowling sensation from Nepal after Sandeep Lamichhane.pic.twitter.com/QkHqJfjBDS
— Varun Giri (@Varungiri0) December 2, 2024