என் மலர்
நீங்கள் தேடியது "young woman child dies"
ஐ.சி.எப் சிக்னல் அருகே கல்லூரி மாணவர் ஓட்டிய கார் மோதிய விபத்தில் காயம் அடைந்த இளம்பெண் மற்றும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் தாகூர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் வசித்த அண்ணன் மகளான 2-ம் வகுப்பு படிக்கும் சுசியுடன் (8) ஐ.சி.எப். சிக்னல் அருகே நடந்து சென்றார்.
அப்போது அதிவேகத்தில் வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் விஜயலட்சுமி, சிறுமி சுசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்த அயனாவரத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகனான கல்லூரி மாணவர் சரணை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிய விஜயலட்சுமியையும், சுசியையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், சுசிக்கு கோயம்பேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிறுமி சுசி பரிதாபமாக இறந்தார். இதேபோல் இன்று அதிகாலை விஜயலட்சுமியும் உயிர் இழந்தார்.
விபத்தில் சிக்கிய 2 பேரும் அடுத்தடுத்து இறந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். ஆவேசம் அடைந்த பலியானவர்களின் உறவினர்கள் இன்று காலை ஐ.சி.எப். கம்பர் அரங்கம் அருகே கொன்னூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பலியான சிறுமி சுசியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பெற்றோர் தெரிவித்து உள்ளனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் சரணை பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காரை அதிவேகமாக ஓட்டியதற்காக ரூ.4 லட்சம் வரை செலவு செய்து மாற்றி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.