search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men attacked"

    திருவட்டார் அருகே பணப்பிரச்சினையில் வாலிபரை தாக்கிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே சுவாமியார்மடம் பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 26). இவரும் காட்டாத் துறையை சேர்ந்த ஹரிராமன் (37), முளகுமூடு பகுதியை சேர்ந்த தேவதாஸ் (46), வெள்ளியோடு பகுதியை சேர்ந்த தனபால் (40) ஆகியோரும் கட்டிட தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் 4 பேரும் கட்டிட தொழிலுக்கு சேர்ந்தே சென்று வருவது வழக்கம். நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இடையே பணப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. தன்னிடம் இருந்து வாங்கிய பணத்தை தரும்படி ரதீசிடம் அவர் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் தேவதாசுக்கு ஆதரவாக ஹரிராமன், தனபால் ஆகியோரும் பேசி ரெதீசிடம் தகராறு செய்தனர். இந்த தகராறு முற்றியதில் 3 பேரும் சேர்ந்து கட்டையால் ரெதீசை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ரெதீஷ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    தன்னை தாக்கியது பற்றி  ரெதீஷ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ஹரிராமனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57). கேபிள் டி.வி. உரிமையாளர். இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள திருப்பனாழ்வார் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (28), அருண் (25) ஆகியோர் சிவக்குமாரை தகாதவார்த்தைகளால் திட்டி அவரை தாக்கினர்.

    இது தொடர்பாக சிவக்குமார் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்ய சென்றார். இதையறிந்த பிரசாந்த், அருண் ஆகியோர் அவரது பின்னால் போலீஸ் நிலையம் சென்றனர். எங்கள் மீது புகார் செய்யக் கூடாது என்று கூறி சிவக்குமாருக்கு மிரட்டல் விடுத்தனர்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் கோவிந்த ராசு, இங்கு வந்து ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? என்று பிரசாந்த், அருண் ஆகியோரிடம் கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் போலீஸ்காரர் கோவிந்த ராசுவை தாக்கி அவரின் சட்டையை பிடித்து இழுத்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையறிந்ததும் அங்கிருந்த மற்ற போலீசார் கோவிந்த ராசுவை மீட்டனர்.

    இது தொடர்பாக போலீஸ்காரர் கோவிந்த ராசு, ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சேத்தியாத் தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், அருண் ஆகியோரை கைது செய்தார்.

    பின்னர் 2 பேரையும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பிரசாந்த், அருண் ஆகிய 2 பேரும் விருத்தாசலம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    ×