search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young Artist"

    • இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
    • 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஹார்வே குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் குழுவினர் தேர்வு செய்தனர். இதில் பிரிவு வாரியாக முதல் பரிசு ரூ.6 ஆயிரம் , இரண்டாம் பரிசு ரூ.4,500 மற்றும் 3-வது பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்ற வெற்றியாளர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்பர் எனத்தெரிவிக்கப்பட்டது.

    இசைக்கருவி இசைத்தல் பிரிவில், நாதஸ்வரம் - கோவிந்தராஜ் (அவிநாசி), தவில் - சங்கிலிதுரை (அலங்கியம்), நாதஸ்வரம் - கிருஷ்ணகுமார் (முத்தூர்).பரதம் பிரிவில், மோனிகா ஜெயஸ்ரீ (அனுப்பர்பாளையம்), சக்தி பிரியா (பாளையக்காடு), யாஷ்னா (முதலிபாளையம்). பாட்டு - மகிழன்பருதி (கருமாரம்பாளையம்), சண்முக பாக்யஸ்ரீ (திருப்பூர்) மற்றும் காயத்ரி (ராக்கியாபாளையம்).கிராமிய நடனத்தில், ஸ்ரீவர்தினி, சன்மதி, சங்கர் ஆகியோரும் ஓவியத்தில் சரண், திரிநேத்ரா, ஜெகன் ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.

    ×