என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Written test was conducted for"

    • ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவிலும் காலியாக உள்ள பணியிடத்துக்கு 8,237 பேர் விண்ணப்பி த்துள்ளனர்.
    • இவர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று காலை நடந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு படித்த தமிழ் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவிலும் காலியாக உள்ள 107 பணியிடத்துக்கு 8,237 பேர் விண்ணப்பி த்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று காலை நடந்தது.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாளர் மெட்ரிக் மகளிர் மேல் நிலைப்பள்ளி, கொடு முடியில் உள்ள தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள நவரசம் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி, பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டி பாளையத்தில் உள்ள சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

    சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி, பவானியில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, ஐடியல் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி, நம்பியூரில் உள்ள குமுதா மெட்ரிகு லேசன் மேல்நிலைப்பள்ளி, அந்தியூரில் உள்ள மங்களம் மேல்நிலைப்பள்ளி, தாளவாடியில் உள்ள ஜே.எஸ்.எஸ். மெட்ரி குலேஷன் மேல்நிலை ப்பள்ளி என மாவட்டம் முழுவதும் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    காலை 10 மணிக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வர்கள் காலை 8 மணி முதலே அந்தந்த தேர்வு மையத்துக்கு வர தொடங்கினர். 9.30 மணி க்குள் தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப் பட்டிருந்தது. 9.50 மணிக்கு மேல் வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேலும் கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. செல்போன் புத்தகங்கள், கைப்பைகள், மின்னணு சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையங்களை அந்தந்த பகுதி தாசில்தார்கள் கண்கா ணித்தனர். வேளாளர் மெட்ரிக் மகளிர் பள்ளியில் நடைபெற்ற எழுத்து தேர்வை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.

    தேர்வு நடைபெறும் மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி செய்யப்ப ட்டிருந்தது. தேர்வுக்காக மாவட்ட போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன.

    ×