என் மலர்
நீங்கள் தேடியது "worker home jewellery robbery"
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சிந்தாமணி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி பாக்கியலட்சுமி. வைரமுத்து அதே பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் இரவு வேலைக்கு சென்று விடவே பாக்கியலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, 60 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
மறுநாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்த வைரமுத்து கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், ஏட்டுக்கள் முனியாண்டி, ராஜபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






