என் மலர்
நீங்கள் தேடியது "Worker dies in accident"
- உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
தேசூர் அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண் டியன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் பாண்டியன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து தேசூர் நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேசூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






