search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Maoist"

    ஒடிசா மாநிலம், மல்லாங்கிரி மாவட்டத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் போலீஸ் சூப்பிரண்ட் முன்னிலையில் இன்று சரண் அடைந்தார். #WomanMaoist #OdishaMaoist
    புவனேஸ்வர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.



    இவர்களில் சிலர் வன்முறையை கைவிட்டு நன்முறை பாதைக்கு திரும்புகின்றனர். அவ்வகையில், ஒடிசா மாநிலம், மல்லாங்கிரி மாவட்டத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் இடி மடி(23) இன்று அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜக்மோகன் மீனா முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.

    கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இவருக்கு ஒடிசா மாநில அரசின் அறிவிப்பின்படி வீடு கட்ட நிதியுதவி, கல்வி கற்க விரும்பினால் அதற்கான நிதி அல்லது விரும்பிய தொழில் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார். #WomanMaoist #OdishaMaoist #Maoistsurrenders
    ×