search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "with flag hoisting"

    • மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி தைப்பூச விழாவை தொடங்கி வைத்தனர்.
    • இதனைத்தொடர்ந்து தேரோட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி காலை 6.20 மணிக்கு நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மேல் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர்க்கு தை பூச விழா வருடந்தோறும் மிக சிறப்பாக 15 நாட்கள் நடக்கும்.

    இந்த ஆண்டு விழாவை சம்பரதாய முறைப்படி செங்குந்த முதலியார் சமூகதத்தினை சேர்ந்த நாட்டமை, பெரிய தனகாரர்கள், பெரியவர்கள் முன் நின்று மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி தைப்பூச விழாவை தொடங்கி வைத்தனர்.

    சென்னிமலை மலை மீது நடக்கும் கொடியேற்ற த்திற்காக சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலலாச–நாதர் கோவிலில் இருந்து சாமி புறப்பாடு மற்றும் தீர்த்தக்கு டங்களுடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சாமி மலை மீது படி வழியாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு விநாயகர்வழிபாடு, முளைப்பாரி பூஜைகள், காப்புகட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. அதை தொடர்ந்து மயூரயாகம் நடந்தது.

    அதன் பின்பு முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவர்க்கும் பல்வேறு நெய்வேத்திய பொருட்கள் மற்றும் பவானி கூடுதுறையில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.

    தலைமை குருக்கள் ஸ்ரீ ல ஸ்ரீ ராமநாதசிவம், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து சாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதன் பின்பு மதியம் சேவல் கொடியை தாங்கி உரிய மேளதாளம் முழங்க கோவிலை வலம் வந்து முருகன் சன்னதி கொடி மரத்தில் சேவல் கொடியையும், சிவன் ஆலயம் முன்பு நந்தி கொடியையும் ஏற்றினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடியேற்ற விழாவில் முன்னாள் கோ–-ஆப்டெக்ஸ் இயக்குனர் மெய்யப்பன், எஸ்.ஏ.பி. டெக்ஸ் தலைவர் காவேரி ரங்கன், மெட்றோ சரவணன், எஸ்.ஏ.பி. டெக்ஸ் மேலாளர் சண்முகம், இந்திரா டெக்ஸ் மேலாளர் சுகுமார் ரவி, காங்காதரன், லேத் செந்தில், உள்பட ஊர் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து தேரோட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி காலை 6.20 மணிக்கு நடக்கிறது. தை பூச விழாவின் முக்கிய விழாவான மகா தரிசனம் 9-ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    அன்று சென்னிமலை நகரில் நடராஜப் பெருமா னும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கும்.

    இதில் முருகப் பெருமானை தரிசனம் செய்ய சென்னிமலை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    ×