search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "will be completed by"

    • ஈரோடு அடுத்த நசியனூர் புதுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக குழாய்கள் பொருத்தும் பணியை அமைச்சர் முத்துசாமி இன்று பார்வையிட்டார்.
    • இதனை முதல்-அமைச்சர் வந்து திட்டத்தை தொடங்கி வைப்பார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நசியனூர் புதுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக குழாய்கள் பொருத்தும் பணியை அமைச்சர் முத்துசாமி இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    இப்பகுதியில் திட்ட பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக விவசாயிகள், பொதுப்பணித்துறை மற்றும் பணியை செய்து வரும் நிறுவனத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டுள்ளன .

    இதேபோன்று காலிங்கராயன் பாளையம், நசியனூர் போன்ற பகுதிகளிலும் 2 இடங்களில் சிறு சுணக்கம் பணிகளில் ஏற்பட்டது. அதுவும் தீர்க்கப்பட்டு விடும்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருந்துறை பகுதியில் கடந்த மாதம் அரசு நிகழ்ச்சிக்கு வந்த பொழுது அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் 2 மாதத்திற்குள் முடிவ டையும். நானே வந்து திட்ட த்தை தொடங்கி வைப்பேன் என்று அறிவித்தார்.

    அதன்படி அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். அதற்காக பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இதனை முதல்-அமைச்சர் வந்து திட்டத்தை தொடங்கி வைப்பார். திட்டத்தின் கீழ் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்ப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கீழ்பவானி பாசன திட்டத்தில் முறை வைத்து நீர் தற்போது விநியோகி க்கப்படுவது சம்பந்தமாக விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசி உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாய்க்காலை நவீனப்படு த்துவது குறித்து விவசா யிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு தீர்ப்பு வந்த போதும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று இருந்த போதிலும், விவசாயிகளிடம் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வோம்.

    பவானி நகருக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்று கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் அமைக்க மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதுவும் அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×