என் மலர்
நீங்கள் தேடியது "Wellfare Assistance"
- எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களைுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
- 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.
உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குட்பட்ட உடுமலை வனசரகம் பொறுப்பார் குடில் மலைவாழ் மக்களை சந்தித்து,கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட நக்சல் சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் சார்பாக அப்பகுதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும்,மரக்கன்றுகளை நிறுவனர் உடுமலைடாக்டர் எஸ்.ஏ.ஐ. நெல்சன் வழங்கினார் .உறுப்பினர்கள் சிவலிங்கம்,ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.






