search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welcome ceremony"

    • கல்லூரியில் உள்ள வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறையின் தலைவா் கலையரசி செய்திருந்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியின் வணிகவியல் துறையின் சாா்பில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்குத் தலைமை வகித்து கல்லூரியின் முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    மாறிவரும் வணிக சூழலுக்கு ஏற்ப மாணவா்கள் தங்களது திறன்களை வளா்த்து கொள்ள வேண்டும். மாணவா்கள் வேலைத் தேடுபவா்களாக இல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும். இதற்கு கல்லூரியில் உள்ள வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

    இதில் வணிகவியல் துறையின் மாணவா் பேரவை (கம்போசியா) தலைவராக ஸ்வேதா, துணைத் தலைவராக ரின்சி கேத்ரின், செயலாளராக தனுசங்கா் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறையின் தலைவா் கலையரசி செய்திருந்தாா்.

    ×