என் மலர்
நீங்கள் தேடியது "Web Serial"
- Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.
- தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது
சிங்கப்பூரில் தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு, Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.
தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது போன்ற வரலாற்று உண்மைகளின் பின்னணியில், நாராயண பிள்ளை, முன்ஷி அப்துல்லா, ராஃபில்ஸ் போன்ற நிஜ கதாபாத்திரங்களை வைத்து புனையப்பட்ட கற்பனை கதை இது.
கதைக்களம்
1820-களில், ஆங்கிலேயர்கள் தமிழர்களின் நெசவுத் தொழிலை சீரழித்து, இங்கிலாந்தில் இருந்து துணியை இறக்குமதி செய்ய முயன்றதால், பாரம்பரிய நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இங்கிருந்து கதை தொடங்குகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேயர்கள் தமிழர்களை மனிதர்களாகக் கருதாமல், விலங்குகளைப் போல கப்பல்களில் ஏற்றி, அன்றைய மலாயாவுக்கு (இன்றைய மலேசியா) கூட்டங் கூட்டமாக அனுப்பினர். அங்குள்ள மழை காடுகளை திருத்தி ரப்பர் தோட்டங்களை உருவாக்க நம் தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் ரத்தம்மும் கலந்த நிலங்கள் உருவானது.
இப்படத்தில் தென்னரசு, செங்கோடன், மதுவதனி, வேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சிங்கப்பூர் நடிகர்களான புரவலன், லிங்கம், நிஷா குமார், மலேசிய நடிகர்களான கோவிந்த் சிங், வினோசன், மற்றும் தமிழக நடிகர்களான மோகன் ராம், மதுமிதா, காதல் சுகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் நடிகை கோகிலா மற்றும் "கிழக்குச் சீமையிலே" புகழ் அஸ்வினி ஆகியோர் அம்மா கதாபாத்திரங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாராயண பிள்ளை என்ற உண்மையான கதாபாத்திரத்தில் ப்ருத்திவி ராஜ் மற்றும் முன்ஷி அப்துல்லா கதாபாத்திரத்தில் கோவிந்த் சிங் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப அம்சங்கள்
இந்தத் தொடரின் செட் வடிவமைப்புகள் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. உடை வடிவமைப்பு உலகக்தரத்தில் உள்ளது,
1820-களின் தமிழகத்தை நம் கண்முன்னே நிறுத்தியுள்ளனர். ஒலி-ஒளி அமைப்பு, பின்னணி இசை அனைத்தும் அந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.
இயக்குனர் முகமது அலி இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்கு சிறப்புப் பாராட்டுகள் தேவை.
இந்தத் தொடர் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளின் கடல்களைக் கடந்து படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நெடுந்தொடர். சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பப்படுகிறது.
தமிழக மக்கள் இதை YouTube-லும் கண்டுகளிக்கலாம். சண்டமாருதம் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம்.
- கேரளாவில் தற்போது வெப் சீரியல் எடுப்பதாக கூறி பாலியல் தொழில் நடக்கிறது.
- பல ரிசார்ட்டுகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வெப் சீரியலில் கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறி வாலிபர் ஒருவரை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக திருவனந்தபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த வாலிபர் கேரள ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சில டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தேன். பெண் இயக்குனர் ஒருவர் வெப் சீரியலில் எனக்கு கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறினார். அதனை நம்பி நானும் நடிக்க வந்தேன்.
கேரளாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின்பு என்னிடம் படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினர்.
ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிய பின்னர் என்னை ஆபாச காட்சிகளில் நடிக்க வைத்தனர். தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூறியதால் நான் மறுத்தேன்.
உடனே படக்குழுவினர் நான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை காட்டி மிரட்டினர். மேலும் படத்தில் தொடர்ந்து நடிக்காவிட்டால் ரூ.5 லட்சம் நஷ்டஈடாக தரவேண்டும் எனக்கூறினர். இதனால் வேறுவழியின்றி அந்த படத்தில் நடித்தேன்.
இப்போது அந்த படம் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. இதனை பார்த்த என் குடும்பத்தினர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
கேரளாவில் தற்போது வெப் சீரியல் எடுப்பதாக கூறி பாலியல் தொழில் நடக்கிறது. பல ரிசார்ட்டுகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருக்கிறது.
இதனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. நான் அளித்த புகார் தொடர்பாகவும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு இதில் தலையிட்டு வெப் தளத்தில் வெளியான படத்தை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
வெப் தொடர் தொடர்பாக வாலிபர் கோர்ட்டில் புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






