search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water purification machine"

    • கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் நலன் கருதி உடனடியாக தாலுகா மருத்துவமனையாக ஆக்ககோரி அரசுக்கு கோரிக்கை வைப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட குடிநீர் எந்திரத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


    தூத்துகுடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், ஓன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், பேரவை செயலர் சிந்தாதுரை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திலகவதி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 2 மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர்.தற்போது ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். இங்கு 30 வருடங்கள் பிரேத பரிசோதனை கூடம் செயல்பட்டு வந்தது.

    கயத்தாறு தாலுகா உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் இந்த மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக உயர்த்துவது குறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, தற்போது இங்கு மாதத்திற்கு 15 முதல் 20 பேர் குழந்தை பேரு நடைபெறுகிறது.வெளிநோயாளிகள் தினமும் 150முதல் 200 பேர் வந்து மருத்துவ சேவை பெற்று செல்கின்றனர். மருந்து மாத்திரைகள் கட்டுப்பாடாக உள்ளது எனவும், இந்த மருத்துவமனையை மக்கள் நலன் கருதி உடனடியாக தாலுகா மருத்துவமனையாக ஆக்ககோரி அரசுக்கு கோரிக்கை வைப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    ×