என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Warren Buffett"

    • Oracle of Omaha என்பது வாரன் பஃபெட்-க்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்
    • உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர்

    பங்குச்சந்தை உலகின் ஜாம்பவனாக அறியப்படும் வாரன் பஃபெட், சுமார் ஆறு சதாப்தங்களுக்கு பிறகு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார். தனது வாரிசும், நம்பகமான உதவியாளருமான கிரெக் ஏபலிடம் தலைமை  பொறுப்பை ஒப்படைத்துள்ளார். 

    பங்குச்சந்தையில் லாபம் ஈட்டும் மாயஜாலக்காரர் என புகழப்பெற்ற வாரன் பஃபெட், 1962-இல் பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தை வாங்கினார். பெரும் நஷ்டத்தில் இருந்த அந்த ஜவுளி நிறுவனத்தை, 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்டமான முதலீட்டு நிறுவனமாக மாற்றினார்.

    அதனைத்தொடர்ந்து 1972-இல், அவர் See's Candies நிறுவனத்தை 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். இந்த முதலீடு அவருக்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. 2019-ஆம் ஆண்டிற்குள், இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வரிக்கு முந்தைய வருமானமாக (pre-tax earnings) ஈட்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து அவர் எடுத்த மற்றொரு சிறந்த யோசனை கோகா-கோலா நிறுவனத்தின் பங்குத்தாரர் ஆனது. இவ்வாறு பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான வாரனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும். உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார். 

    Oracle of Omaha என்பது வாரன் பஃபெட்-க்கு வழங்கப்பட்ட புனைப்பெயர் ஆகும். ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை அறிந்து அதில் முதலீடு செய்வது, பங்குச்சந்தையில் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும், குறுகிய கால லாபத்தை எதிர்பார்க்காமல், பல ஆண்டுகள் முதலீட்டைத் தொடர்வது போன்ற அணுகுமுறைகளும், புத்திசாலித்தனமுமே வாரனின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன. 

    யார் இந்த கிரெக் ஏபல்?

    கடந்த 2000 ஆம் ஆண்டில் மிட்அமெரிக்கன் எனர்ஜியை பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) கையகப்படுத்தியபோது அதில் ஏபல் இணைந்தார். பஃபெட் அடிக்கடி ஒரு சோர்வில்லா உழைப்பாளி மற்றும் நேர்மையான தொடர்பாளர் என்று ஏபலை பாராட்டியுள்ளார். 63 வயதுடைய ஏபல், 2018 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் துணைக் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 

    பங்குச் சந்தை கணிப்பில் ஜாம்பவானும் பிரபல தொழிலதிபருமான வாரன் பஃபெட் 13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் எட்வர்ட் பஃபெட் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார்.

    உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்கஷயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். இவருடைய சொத்துகளின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

    பிரசித்திபெற்ற கொடையாளரான பஃபெட் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார். அதன்படி, கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி டாலர்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் நன்கொடையாக அளித்துள்ளார்.

    இந்நிலையில், தொடர்ந்து 13-வது ஆண்டாக சுமார் 340 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள "பெர்கஷயர் ஹாதவே" நிறுவனத்தில் தனக்குள்ள 17.7 மில்லியன் பங்குகளை அவர் தற்போது நன்கொடையாக அளித்துள்ளார்.

    நேற்றைய நிலவரப்படி, இந்த பங்குகள் ஒவ்வொன்றின் முகமதிப்பு சுமார் 192 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்கொடையின் பெரும்பகுதி பில்கேட்ஸ் நடத்திவரும் பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் தனது குடும்பத்தினர் நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. #WarrenBuffett #WarrenBuffettdonates$3.4bln
    ×