search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishwakarma"

    • விஸ்வகர்மா திட்டத்தில் மீனவர்கள் பயனடைந்தனர்.
    • பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.

    ராமநாதபுரம்

    மீன்பிடி, மண்பாண்டம் தயாரித்தல், பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் விஷ்வ கர்மா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க 5 சதவீத வட்டியில் முதற்கட்டமாக ரூ 1 லட்சம் வங்கி கடனுதவி அளிக்கப்படுகிறது. தவணை தொகையை உரிய காலத்தில் திரும்ப செலுத்தும் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.2 லட்சம் திரும்ப வழங்கப் படும்.

    இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் பரிந்துரை படி காந்திஜி மீனவர் சங்க தலைவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே தாமோதர பட்டினத்தை சேர்ந்த நாட்டுப்படகு வலை பின்னும் தொழிலாளி பழனிவேல்,ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர் ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் கருப்பசாமி ஆகியோருக்கு கடந்த 17-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அடையாள அட்டை வழங்கினார். பிரதமரை சந்தித்து விட்டு ஊர் திரும்பிய பழனி வேல்,கருப்பசாமி ஆகி யோரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் வர வேற்று வாழ்த்து தெரி வித்தார்.

    பழனிவேல் கூறுகையில், பாரம்பரிய தொழில்கள், அதனை சார்ந்த துணை தொழில்கள் அழிவின் விளிம்பில் சென்று விடாமல் இருக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் நாடு முழுவதும் பராம்பரிய தொழில்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது என்றார்.

    பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.

    • மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • ஏற்பாடுகளை ஓ.பி.சி. அணியின் பொருளாளர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக புதுவை பா.ஜனதா ஓ.பி.சி. அணியின் தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமையில் நெல்லித்தோப்பு பகுதியில் மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இத்திட்டத்துக்கு மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கைவினை தொழிலாளர்கள் பயன் அடையும் வகையில் அமைந்துள்ளது.

    இதனை பொதுமக்கள் பார்த்து பயனடைந்தனர். இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியின் போது 18தொழில்களின் அஞ்சல் தலைகள் அடங்கிய பிரதமர் மோடி வெளியிட்ட தொகுப்பையும் பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி

    யடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், ஓ.பி.சி. அணியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஓ.பி.சி. அணியின் பொருளாளர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

    ×