search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virudhunagar farmer"

    விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பண்ணைக்குட்டைகள், மழை பெய்கின்றபொழுது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை சேகரித்து வைத்து அந்த நிலத்தில் பயிர்களின் முக்கியமான வளர்ச்சி பருவத்தில், பயிர்கள் நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும்பொழுது பயிர்களுக்கு தக்க நேரத்தில் உயிர் பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பயன்படுகிறது.

    இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது. பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கன மானதாகவும், விவசாயிகளிடம் வரவேற்பினைப் பெற்ற அமைப்பாகவும் விளங்குவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, காவிரி டெல்டா கடை மடை விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் ரூ.100 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் மொத்தம் 418 எண்கள் பண்ணைக்குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூ.4.18 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு அமைக்கப்பட உள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தினைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×