search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikramasinghapuram"

    • விக்கிரமசிங்கபுரம் சந்தன மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற இருக்கிறது.
    • இரவு 8 மணிக்கு கணியான் கூத்து, இரவு 8.30 மணிக்கு சப்பரம் ஏழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    விக்கிரமசிங்கபுரம்- பாபநாசம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அனைத்து சமுதாயத்திற்கும் பாதிக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற இருக்கிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முதல் யாகசாலை பூஜையும், இன்று 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நாளை நூதன விமானம் ஜீர்னோதாரண அஷ்டபந்தனம் விழாவும் காலை 6 மணிக்கு மகர லக்கினத்தில் பரமாச்சி அம்மன், சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    காலை 11 மணிக்கு மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சியும் சிவந்திப்பர் கோவில் வெளி பிரகாரம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு கும்மி பாட்டு, இரவு 8 மணிக்கு கணியான் கூத்து, இரவு 8.30 மணிக்கு சப்பரம் ஏழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    ×