என் மலர்

  நீங்கள் தேடியது "Vidya Homam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வித்யா ஹோமம் நடைபெற்றது.
  • அரசாங்க தேர்வு உள்பட பல்வேறு தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைபெற்றது.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வித்யா ஹோமம் நடைபெற்றது. அரசாங்க தேர்வு, மத்திய இடைநிலை கல்விவாரிய தேர்வு, 10,11,12 மற்றும் நீட் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைபெற்றது.

  இதனையொட்டி காலையில் சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஜபம், வருண ஜபம், ஹயக்கிரிவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

  பின்னர் கோடிசக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உமா சேதுராஜ், கயல்விழி காந்தி ஆகியோர் செய்தனர்.

  ×