என் மலர்

  நீங்கள் தேடியது "Vasudevan Utensil Store"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாசுதேவன் பாத்திரக்கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது.
  • கடந்த 44 ஆண்டுகளாக வாசுதேவன் பாத்திரக்கடை தனி முத்திரை பதித்து வருகிறது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் அரண்மனை அருகில் வாசுதேவன் பாத்திரக்கடை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான எவர்சில்வர், அலுமினியம், பித்தளை பாத்திரங்கள், உலகத்தரம் வாய்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

  இது குறித்து கடையின் உரிமையாளர் ஜோதிமணி கூறியதாவது:-கடந்த 44 ஆண்டுகளாக வாசுதேவன் பாத்திரக்கடை தனி முத்திரை பதித்து வருகிறது. சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திரக்கடை இன்று அரண்மனை பகுதியின் அடையாள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் கல்யாண சீர்வரிசை மற்றும் விசேஷ காலங்களுக்கு பாத்திரங்கள் வாங்க மக்கள் திரண்டு வருவதற்கு காரணம் வாசுதேவன் கடையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும். பாத்திர விற்பனையுடன் தொடங்கப்பட்ட கடை இன்று பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் விற்பனையிலும் முன்னிலை வகித்து வருகிறது. விசேஷ காலங்களில் பல்வேறு சமையல் சாதன பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறோம்.

  இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகையாக உலக தரம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களின் மிக்சி, கிரைண்டர், எல்.பி.ஜி. ஸ்டவ், குக்கர், நான்ஸ்டிக் பொருட்கள் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். இந்த சலுகை தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே பொருந்தும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×