search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Fair"

    • பழமை காலங்களில் சிலை உள்ளிட்ட பல்வேறு பழமை காலம் பற்றியும் என அறிவியல் தமிழ் என பல்வேறு வகை பற்றி கண்காட்சியில் கூறப்பட்டிருந்தது.
    • இதனை அடுத்து பெற்றோ ர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பொருளாளர் என பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் என அனைத்து வகை பாடங்களுக்கான பல்வகை கண்காட்சி அரங்குகள் அந்தந்த பாட ஆசிரியர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது.

    இந்த பல்வகை கண்காட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது, தானியங்கி சாதனம் பற்றியும், தமிழில் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை மற்றும் தொன்மை பாதுகாப்பு பற்றி பல்வேறு பழமை காலங்களில் சிலை உள்ளிட்ட பல்வேறு பழமை காலம் பற்றியும் என அறிவியல் தமிழ் என பல்வேறு வகை பற்றி கண்காட்சியில் கூறப்பட்டிருந்தது.

    இதன்படி ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், மதுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கோவிந்தராஜ், காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மைதிலி ஆகிய பட்டதாரி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு பாடவாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏனாதி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

    இதனை அடுத்து பெற்றோ ர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பொருளாளர் என பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இதில் அத்திவெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசண்முகவேலன் உட்பட ஆசிரியர்கள், ஆசிரியைகள், நிர்வாகிகள், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    ×