என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanchinathan Statue"

    • செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் முழுஉருவச்சிலை கடந்த 1986-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
    • செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி தனது சொந்த பணம் ரூ.50ஆயிரம் செலவில் வாஞ்சிநாதன் சிலைக்கு வர்ணம் பூச ஏற்பாடு செய்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் முழுஉருவச்சிலை கடந்த 1986-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சிலை பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதையறிந்த செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி தனது சொந்த பணம் ரூ.50ஆயிரம் செலவில் வாஞ்சிநாதன் சிலைக்கு வர்ணம் பூச ஏற்பாடு செய்தார்.அதைத்தொடர்ந்து வண்ணம் பூசும் பணிகள் மற்றும் சீரமைப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு வெண்கல சிலையை நகராட்சி தலைவர் ராமலட்சுமி திறந்து வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், உறுப்பினர்கள் முத்துப்பாண்டி பேபி ரெசவு பாத்திமா, மேரிஅந்தோணிராஜ், இந்துமதி சக்திவேல், செல்வகுமாரி முத்தையா, முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் திலகர், ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×