search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van driver arrest"

    • முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார்.
    • ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி வடக்குத்தெரு காலனியை சேர்ந்தவர் முருகன் (43). விவசாய கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பட்டாளம்மன் கோவில் அருகே தனது மனைவி சித்ரா (40) உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காலனி தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (28) என்பவர் சித்ராவை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த முருகன் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பார்த்த போது அதில் தனது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனின் செல்போனை வாங்கி சோதனை செய்தார்.

    தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரியும் ஜெயச்சந்திரன் பள்ளி, கல்லூரி மாணவிகள் புகைப்படம் உள்பட தெருக்களில் நடந்து செல்லும் பெண்களின் புகைப்படம் என மொத்தம் 1500 போட்டோக்களை பதிவு செய்து வைத்திருந்தார். இதனை அவர் எதற்காக பதிவு செய்து வைத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த மேலூரை சேர்ந்த 4 வயது சிறுமி புங்கம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த வேனில் டிரைவராக பால்பாண்டி என்பவர் இருந்தார்.

    இந்த நிலையில் பள்ளி சென்று திரும்பிய சிறுமியின் உடையை பெற்றோர் மாற்றினர். அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இது பற்றி சிறுமியிடம் பெற்றோர் கேட்ட போது வேன் டிரைவர் பால் பாண்டி பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து தன்னிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

    சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    ×