search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadanemmeli pannai"

    மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி முதலை பண்ணையில் முதல் முறையாக சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப்பண்ணை உள்ளது.

    இங்கு 25 வகை முதலைகளும், ஆமைகள், பாம்புகள் உட்பட 35 வகை ஊர்வன விலங்குகளும் உள்ளன.

    இதனை காண சுற்றுலா பயணிகளுக்கு திங்கட்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் பகலில் மட்டும் அணுமதி வழங்கப்பட்டு வந்தது.

    பொதுவாக முதலைகள் இரவில் தான் சுதந்திரமாக உலவுவது வழக்கம். அப்போது முதலைகளின் கண்கள் சிகப்பாக ஒளி வீசுவதை பார்க்கும் போது, அதன் உறுமல் சத்தமும் திரில்-பயம் கலந்த புது அனுபவமாக இருக்கும்.


    முதலைகளை அதன் வசிப்பிடத்தில் இரவில் சென்று பார்க்கும் அனுமதி வெளிநாடுகளில் மட்டும் உண்டு. இந்தியாவில் கிடையாது.

    இந்த நிலையில் முதல் முறையாக வடநெம்மேலி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு ரூ.100-ம், பெரியவர்களுக்கு ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. #Tamilnews
    ×