என் மலர்

  நீங்கள் தேடியது "TVS Radeon 110"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110சிசி மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. #TVSMotors  டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரேடியான் 110சிசி மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்திருக்கிறது. அந்தவகையில் தற்சமயம் டி.வி.எஸ். ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

  டி.வி.எஸ். ரேடியான் 110 புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் ஆகும். ஏற்கனவே ரேடியான் 110 மாடல் மெட்டல் பிளாக், பியல் வைட், ராயல் பர்ப்பிள் மற்றும் கோல்டன் பெய்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

  தற்சமயம் ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் புதிய நிறம் தவிர மெக்கானிக்கல் அம்சம் மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. அந்த வகையில் முந்தைய வேரியண்ட்களை போன்றே புதிய மாடலிலும் குரோம் கார்னிஷ், ரப்பர் டேன்க் பேட்கள், 3டி டி.வி.எஸ். லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.   ரேடியான் மோட்டார்சைக்கிள் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது, இது இந்த பிரிவு மோட்டார்சைக்கிளில்களில் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மோட்டார்சைக்கிள் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.

  டி.வி.எஸ். ரேடியான் 110 சிசி மோட்டார்சைக்கிளில் 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர் @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. ரேடியான் 110 சிசி மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 69.3 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

  இந்தியாவில் அறிமுகமானது முதல் டி.வி.எஸ். ரேடியான் மாடல் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
  ×