search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Shiva"

    • பாஜகவில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
    • தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

    தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வைரலானது.

    இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.க்ஷ

    இந்நிலையில், பாஜகவில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருச்சி சூர்யா சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

    அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    ×