என் மலர்
நீங்கள் தேடியது "Tree Planting Ceremont"
- இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாகவும், மரக்கன்றுகள் நடப்பட்டன.
- விழாவில் திரு மண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத்:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சம சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சார்பாக மறுரூப ஆலயத்தில் மரக்கன்றுகன நடும் விழா, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாகவும், மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் இயக்குநரும், திருமறையூர் சேகர தலைவருமான ஜாண் சாமுவேல் தலைமை தாங்கினார். சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன்துரை முன்னிலை வகித்தார்.
விழாவில் திரு மண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவ தாஸ், சபை மூப்பர்கள் பாக்கியநாதன், ஜீவன், அகஸ்டின் செல்வராஜ், ஜாண்சேகர், ஜோயல் கோல்டுவின், பிரவின்குமார்,புஷ்பலதா சுவாமிதாஸ், ஆலய பாடகர் குழுவினர்கள், சபை மக்கள், தேவதாஸ் மறைக்குமார், நளினி ஜீவராஜ், பிரைட்டன் ஜோயல், முதியோர் இல்லம் மேலாளர் வனமோகன் ராஜன்,மனவளர்ச்சிகுன்றியோர் பள்ளி செயலர் எபனேசர், நாசரேத் முன்னாள்சேகர செயலர் மர்காஷியஸ் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து திருமறையூர் முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை சேகரத்தலைவர் ஜாண்சாமுவேல், சபை ஊழியர், ஸ்டான்லி ஜான்சன் துரை, ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் சபை மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.






