என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tran Blying Bennett"

    • கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தேசியக் கொடி ஏற்றுகிறார்.
    • ரெயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

    கோவை:

    நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தேசியக் கொடி ஏற்றுகிறார்.

    பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், போலீசாருக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்குகிறார்.

    இந்தநிலையில், போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என மொத்தம்1,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்கள், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். புறநகர் பகுதியிலும் 500 போலீசார் இன்று முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    ரெயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு கருவிகளுடன் பிளாட் பாரங்கள், பயணிகள் அமரும் இடங் களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து போலீசார் மக்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உஷார்ப டுத்தப்பட்டு ள்ளனர்.விமானநிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ளூர் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் பயன்படுத்தக்கூடாது எனவும், விமான நிலைய பகுதியில் டிரோன் பறக்கவும் போலீசார் தடை விதித்து உள்ளனர். 

    ×