search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training in Small Grain"

    • நஞ்சை கொளாநல்லி கிராமத்தில் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைப்பெற்றது.
    • சிறுதானிய பயிர்களின் சாகுபடி செய்வதனின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.

    ஈரோடு:

    வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளா ண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 செயல்படுத்தபடும் நஞ்சை கொளாநல்லி கிராமத்தில் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைப்பெற்றது.

    பயிற்சி கொடுமுடி வட்டார வேளாண்மை அலுவலர் ரேகா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் பவானிசாகர் இணை பேராசிரியர் சோபா திங்கள்மணியன் சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

    மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், சிறுதானிய பயிர்களின் சாகுபடி செய்வதனின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.

    மேலும் சிறுதானிய பயிர்களின் வகைகள், உயிர் உரங்கள் இடுதல் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் தியாக ராஜன் தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் பற்றியும், நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் பற்றியும் எடுத்துரைத்தார்.

    வேளாண்மை அலுவலர் ரேகா வேளாண்மை துறையின் நலத்திட்டங்கள் பற்றியும், உயிர் உரங்களின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    மேலும் உதவி வேளாண்மை அலுவலர் மாதவன் மரக்கன்றுகள் விநியோகம் பற்றியும் மானிய திட்டங்கள் பற்றியும் விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் ரேணுகா உழவன் செயலி, இ-வாடகை, அக்ரிகார்ட், மானிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×