search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourists crowd"

    ஒகேனக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
    ஒகேனக்கல்:

    தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.

    மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி பகுதியில் மீன் சாப்பாடு சமைத்து வாங்கி கொண்டு குடும்பத்துடன் மீன் சாப்பாடு உணவை ரசித்து சாப்பிட்டனர்.

    கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது.

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல்லில் நேற்று முன் தினம் காலை வினாடிக்கு 21,700 கன அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக வந்தது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். தொங்கு பாலத்தில் சென்று மகிழ்ந்தனர்.


    பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் தொடர் விடுமுறை காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஒகேனக்கல்:

    தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுகு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் படையெடுத்தனர். இன்று சனிக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மக்கள் வீட்டில் இறைச்சிகள் எடுத்து சமையல் செய்து குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு சென்று குளித்து விட்டு உணவுகளை சாப்பிட்டனர்.

    மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கார், டெம்போ, பஸ், பைக் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு திக்குமுக்காடினர்.

    கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. அதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தை வந்தடைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

    ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக வந்தது. இதனால் மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டது. ஒகேனக்கல் மெயின் அருவி நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    நேற்று காலை வினாடிக்கு 21,700 கனஅடியாக குறைந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று மதியம் தடை நீக்கப்பட்டது. இன்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    பரிசல் சவாரி சென்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொங்குபாலத்தில் சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

    தொடர்விடுமுறை காரணமாக இன்று 2-வது நாளாக ஒகேனக்கலில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், சேலம், நாமக்கல் உள்பட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலங்களில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்பட அணைகள் நிரம்பின. அதில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக -தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு படிப்படியாக நீர்வரத்து சரிந்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மீண்டும் கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரித்ததால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 19 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து காரணமாக ஒகேனக்கலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று ஆடிப்பெருக்கு விழா தொடங்கப்பட்டது. இந்த விழா தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவை யொட்டி ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    வெள்ளப்பெருக்கின் போது மெயினருவியில் தடுப்பு கம்பிகள் சிதலமடைந்ததாலும், நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

    மெயினருவிக்கு செல்லும் பாதையில் நுழைவு வாயின் அருகே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதில் அவர்கள் குளித்து விட்டு காவிரி அன்னையை வணங்கினர்.

    மேலும், பரிசல் இயக்கமும் நேற்று தொடங்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வழக்கமான பரிசல் நிலையத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு பதிலாக மாற்று இடமான கோத்திக்கல் பாறையில் இருந்து நேற்று பரிசல் இயக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    தொடர்விடுமுறை காரணமாக இன்று 2-வது நாளாகவும் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்பட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மெயினருவிக்கு செல்லும் நடைபாதை அருகே மற்றும் முதலை பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு இவர்கள் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் தடையை மீறி செல்லாமல் இருக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்காவில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று 2-வது நாளாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

    இன்றும், நாளையும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலை உள்ளதால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றின் கரையோரம் போன்ற தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்களை மீட்க போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று விடுமுறையின் காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகளால் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சிலர் குடும்பத்துடன் வந்து சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு சென்றனர். பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக வனப்பகுதி பயணியர் மாளிகை அருகே வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery


    ×