search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Torchlight"

    • கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
    • பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன் தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.

    பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

    • சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவிகளின் விடுதியில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அலுவலகத்தை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சரவணா நகரில் அமை ந்துள்ள தனியார் பள்ளி மாணவிகள் விடுதியின் ஒருங்கிணைப்பாளராக பரமேஷ்வரன் மகன் சேவா (வயது 58) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8-ந்தேதி அன்று பணி நிமித்தமாக விடுதியில் உள்ள அலுவலகத்தை பூட்டிவிட்டு கோயமுத்தூர் சென்றார். மீண்டும் 10-ந்தேதி திரும்பி வந்து அலுவலகத்தை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது எல்.இ.டி. டிவி, ஸ்மார்ட் போன், தங்க நாணயங்கள், விலையுயர்ந்த டார்ச் லைட், ரூ.3 ஆயிரம் ஆகியன திருடு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், கனியாமூர் வடக்கு வீதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 39) என்பதும், மாணவிகள் விடுதியில் பணம் மற்றும் பொருள்களை திருடியதும் தெரியவந்தது. மேலும், சின்னசேலம் ராஜேஸ்வரி தியேட்டரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×