என் மலர்
நீங்கள் தேடியது "to recover the land"
- சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- கிழக்குக்காடு பகுதியில் பெரியாற்றின் கரையில் பனந்தோப்பாக இருந்த பகுதி பல நுாறு ஆண்டுகளாக மயானமாக இருந்து வருகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஆக்கிர மிப்பில் சிக்கியுள்ள மயான நிலத்தை மீட்கவும், இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல புறவழிச்சாலையின் இருபுறமும் பாதை அமைத்து கொடுக்கவும், வாழப்பாடி வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முக்கிய குடியிருப்பு பகுதியான அக்ரஹாரம், காமராஜ்நகர் ஆத்துமேடு, மங்கம்மாநகர், கிழக்குக்காடு உள்ளிட்ட பகுதி மக்களுக்கு, கிழக்குக்காடு பகுதியில் பெரியாற்றின் கரையில் பனந்தோப்பாக இருந்த பகுதி பல நுாறு ஆண்டுகளாக மயானமாக இருந்து வருகிறது.
சேலம்-– உளுந்துார் பேட்டை 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்கு வாழப்பா டியில் புறவழிச்சாலை அமைப்பதற்கு, இந்த மயானத்தின் பெரும்பகுதி நிலம் எடுக்கப்பட்டு சாலையாக மாறி விட்டது. புறவழிச்சாலையின் தெற்கு புறத்திலுள்ள நிலம் தனியார் சிலரின் ஆக்கிரமிப்பில் சிக்கிக் கொண்டது. எஞ்சியுள்ள குறுகிய பகுதிக்கும் மழைக்காலங்க ளில் பெரியாற்றை கடந்து செல்வதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இறந்த வர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மட்டுமின்றி, கொண்டு சென்று தகனம் செய்வதற்கு கூட போதிய இடமும், பாதை வசதியும் இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே அக்ரஹார வாழப்பாடி மயானத்தை அளவீடு செய்து ஆக்கிர மிப்பை அகற்றி நிலத்தை மீட்கவும், இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு புறவழிச்சாலையின் இருபுறமும் பாதையும், பெரியாற்றை கடந்து மயானத்திற்கு செல்வதற்கு தரைப்பாலமும் அமைத்து கொடுப்பதற்கும், வாழப்பாடி வருவாய்த்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
மயான நிலத்தை அளந்து அத்துக்காட்டுஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க வேண்டுமென வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி ஓராண்டு கடந்தும், இன்னும் நில அளவீடு செய்யப்படவில்லை.
தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி ஆற்றில் வழிந்து வருகிறது. இதனால் இறப்பவர்களின் உடலை கொண்டு செல்ல வழியும், அடக்கம் செய்வதற்கு போதிய இடவசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மயானத்தை அளவீடு செய்து ஆக்கிரப்பபை அகற்றி நிலத்தை மீட்கவும், சாலை அமைத்து கொடுக்கவும், முட்புதர்களை அகற்றி உடல்களை அடக்கம் செய்ய இடவசதி செய்து கொடுக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






