search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur New Bus Station"

    • தற்போது புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.
    • பி.என்.ரோடு வழியாக புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலையம் வந்து ஊத்துக்குளி ரோடு வழியாக இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, திருவண்ணாமலைக்கு ஊத்துக்குளி மார்க்கமாக செல்லும் பஸ்கள் திருப்பூர் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.

    மாநகருக்குள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கான முன் னேற்பாடுகளை மேயர் தினேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து இன்று அதிகாலை முதல் சேலம், ஈரோடு, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் திருப் பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு பலகை யுனிவர்செல் தியேட்டர் ரோடு பகுதிகளில் வைக்கப்பட்டன.மேலும் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் இயங்கி வந்த தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்படவில்லை.

    சேலம், ஈரோடு, திருவண்ணாமலை செல்லும் பஸ் கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பி.என்.ரோடு வழி யாக புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலையம் வந்து ஊத்துக்குளி ரோடு வழியாக இயக்கப்படுகிறது. பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளு மாறு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் கிளை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இன்று முதல் நாள் என்பதால் சேலம், ஈரோடு செல்லும் பயணிகள் யுனிவர்சல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நின்ற போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவது குறித்து தெரிவித்ததுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

    ×