என் மலர்
நீங்கள் தேடியது "Tirupati-Palani"
- தினந்தோறும் பஸ் இயக்க கோரிக்கை.
- 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும்.
திருப்பதி:
திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி அரசு சொகுசு பஸ் போக்குவரத்தை துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் யாத்திரையாக பழனிக்கு சென்ற போது அங்கிருந்த பக்தர்கள் திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி இல்லை என தனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். தினந்தோறும் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி ஆகியோருடன் கலந்து பேசினேன்.
உடனடியாக பழனிக்கு பஸ் வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. 2 ஆன்மிக தலங்களுக்கும் இடையே பஸ் வசதி தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் அரசு பஸ் காலை 7 மணிக்கு பழனியை சென்றடைகிறது. 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் பழனியில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருப்பதியை வந்து அடைகிறது.
பெரியவர்களுக்கு ரூ.680, சிறியவர்களுக்கு ரூ.380 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து நேரடியாக பழனிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






