search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchendur Manimandapam"

    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், பொருளாளர் ராமநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் சேகர், நிர்வாகிகள் பில்லா ஜெகன், மாமன்னன், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி


    ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் அதன் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய சீசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குழு செல்வி, சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் ரெஜூலா பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ஹெக்டேவர் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், அவரது மகன் ரகுராமன் மற்றும் பேரன் சிதம்பர ஈஸ்வர் ஆகியோருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர்கள் அழகேசன், முருகன், துணைச்செயலாளர்கள் சத்தியசீலன், பார்த்திபன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், கோடீஸ்வரன், ரமேஷ், ஆறுமுக நயினார், பட்டு, மதன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன் பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் நிலஅளவையர், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    அதன்படி மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பேரூராட்சி தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர்.

    தொழிலதிபர் தண்டுபத்து ஜெயராமன் சார்பில் அவரது மகன்கள் ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர் தலைமையில் கவுன்சிலர் கிருஷ்ணவேனி, செண்பகராமன் உள்ளிடோர் மாலை அணிவித்தனர்.

    காயாமொழி கூட்டுறவு சங்கம் சார்பில் தலைவர் தங்கேச ஆதித்தன் தலைமையில் உபதலைவர் திருநாவுக்கரசு, உறுப்பினர் ராமலிங்கம், செயலாளர் அந்தோணி தினேஷ், பணியாளர்கள் சின்னத்துரை, நாராயணன், அசோக்குமார் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவபால் தலைமையில் அப்பாத்துரை உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் சேவியர்பெஸ்கி தலைமையில் பேராசிரியர், அலுவலர்கள் மாலை அணிவித்தனர்.

    ஆதித்தனார் கல்லூரி சுயநிதி பேராசிரியர்கள் அதன் தலைவர் பென்னெட் தலைமையில் மாலை அணிவித்தனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில், ஊர் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் ராஜன் ஆதித்தன், வரதராஜன் ஆதித்தன், ஹெட்கெவாட் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட டாக்டர் சிவந்திஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் தட்சணமாற நாடார் சங்க இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற இணைச்செயலாளர் செல்லத்துரை, உறுப்பினர்கள் சங்கரநாராயணன், கிருஷ்ணகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் சரவணன், இளைஞரணி செயலாளர் உடையார், உறுப்பினர்கள் விக்னேஷ், வெங்கடேஷ், திருமணி செல்வம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் அதன் மாநில தலைவர் டாக்டர் கென்னடி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத்தலைவர் உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    ×