என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruthani RTO Office"

    சாதி சான்றிதழ் வழங்க கோரியும், அதிகாரிகளை கண்டித்தும் திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த வீரக்குப்பம் அருந்ததியர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சான்றிதழ் கேட்டு திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு செய்து இருந்தனர்.

    ஆனால் அவர்கள் அனைவருக்கும் சாதி சான்றிதழ் கொடுக்காமல் கோரிக்கை மனுவை அதிகாரி தள்ளுபடி செய்ததாக தெரிகிறது.

    இதுபற்றி சாதி சான்றிதழ் கேட்டவர்கள் அதிகாரிகளிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சாதி சான்றிதழ் வழங்க கோரியும், அதிகாரிகளை கண்டித்தும் அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் இன்று காலை திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
    ×