search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirucoutralanathaswami temple"

    • பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரை சபை அமைய பெற்றதுமான குற்றாலநாதர் ஆலயம் குற்றாலத்தில் அமைந்துள்ளது.
    • 4-ந் தேதியன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

    தென்காசி:

    குற்றாலத்தில் பழமையானதும், தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரை சபை அமைய பெற்றதுமான குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருக்குற்றாலநாதா் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான மாா்கழி திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக குற்றாலநாத சுவாமி ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாள் தோறும் காலை மாலை சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 5-ந் திருநாளான ஜனவரி 1 -ந் தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், 4-ந் தேதியன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 6-ந் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும். விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×