search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiru ambala chakram"

    சிவபெருமானை மனத்தால் தியானித்து வணங்கி, கீழ்க்காணும் சிவநாமங்களைக் கூறி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து திருவம்பலச் சக்கரத்தை வழிபடலாம்.
    ஓம் பவாய நம:
    ஓம் ருத்ராய நம:
    ஓம் ம்ருடாய நம:
    ஓம் ஈசானாய நம:
    ஓம் சம்பவே நம:
    ஓம் சர்வாய நம:
    ஓம் ஸ்தானவே நம:
    ஓம் உக்ராய நம:
    ஓம் பர்காய நம:
    ஓம் பரமேஸ்வராய நம:
    ஓம் மகாதேவாய நம

    வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்ட பிறகு, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நெய் இட்ட சாதத்தை நிவேதனம் செய்து, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வணங்கவும். எளிய முறையில் வழிபடுவோர் பூஜையின்போது கீழ்க்காணும் காயத்ரீ மந்திரம் மற்றும் துதிப்பாடலைப் படித்து வழிபட்டும் பலன் பெறலாம்.

    காயத்ரீ

    ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி.
    தந்தோ சிவ: ப்ரசோதயாத்

    துதிப்பாடல்...

    கங்கைவார் சடையாய் கணநாதா
    காலகாலனே காமனுக்குக் கனலே
    பொங்குமால் கடல்விடம் இடற்றானே
    பூதநாதனே புண்ணியா புனிதா
    செங்கண்மால் விடையாய்த் தெளிதேனே
    தீர்த்தனே திருவாவடுதுறையுள்
    அங்கணா எனை அஞ்சேல் என்று அருளாய்
    ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே!

    எல்லோரும் திருவம்பலச் சக்கரத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென சொல்லப்பட்ட எளிய கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். லாகிரி- புகையிலை வஸ்துகளை பயன்படுத்தாமை, தெய்வ நிந்தையை தவிர்ப்பது, புலன் அடக்கம் ஆகியவை அவசியம்.
    ×