என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theft jewellery"

    தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பார்வதி (வயது70). இவர் சம்பவத்தன்று முக்காணியில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ்சில் வந்தார். 

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது நகையை மர்ம நபர் அபேஸ் செய்துவிட்டான். பறிபோன நகையின் மதிப்பு ரூ.51 ஆயிரம். 

    இதுபற்றி தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×