என் மலர்
நீங்கள் தேடியது "The young lady at"
- வீட்டிலிருந்து மாலதி வெளியே சென்று உள்ளார்.
- மனைவி குறித்து எந்த ஒரு தகவல் இல்லாததால் முத்துமணி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. இவரது மனைவி மாலதி (24).
முத்துமணி கோவையில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடமாக திண்டுக்கல் வெள்ளப்பெட்டியில் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி விஜயமங்கலத்திற்கு தனது மனைவியுடன் முத்துமணி வந்தார். முத்துமணி வேலைக்கு செல்லும் நேரத்தில் மாலதி யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டிலிருந்து மாலதி வெளியே சென்று உள்ளார். முத்துமணியும் அவரது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று இருப்பார் என நினைத்து அவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு மாதம் ஆகியும் மனைவி குறித்து எந்த ஒரு தகவல் இல்லாததால் முத்துமணி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி மாமியார் வீட்டிற்கும் வரவில்லை என தகவல் தெரிய வந்தது.
இதனையடுத்து முத்துமணி உடனடியாக இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






