search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The temporary"

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நஞ்சை புளியம்பட்டியில் உள்ள தற்காலிக நெல் கொள்மதல் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • இதனால் விவசாயி களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்து க்குக்குட்பட்ட நஞ்சை புளியம்பட்டி, புஞ்சை துறையம்பாளையம் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது.

    பெரும்பான்மையான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நெற்பயிர்கள் அறுவடை முடிந்த நெல் மணிகளை விவசாயிகளிடம் அரசு நேரடியாக தற்காலிக டெண்டர் அமைத்து கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் பெரும்பாலான தற்காலிக நெல்கொள்முதல் நிலையம் களிமண், மண் தரை கொண்ட களங்களாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நஞ்சை புளியம்பட்டியில் உள்ள தற்காலிக நெல் கொள்மதல் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் விவசாயிகள் கொட்டிய நெல் மணிகள் மழை காலங்களில் நீர் சூழ்ந்து கொள்வதாலும், ஈரப்பதம் குறையாமல் இருப்பதினால் கொள்முதல் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் விவசாயி களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே சிமெண்ட் களத்துடன் கூடிய நிரந்திர கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நிதியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் நஞ்சை புளியம்பட்டி ஊராட்சியில் களம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நஞ்சை புளியம்பட்டி ஊராட்சியில் வருவாய் துறைக்கு உட்பட சர்வே எண்:44-ல் சுமார் 40 சென்ட் கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் 50 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட களம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த இடம் முழுவதும் சிமெண்ட் களம் அமைத்து அதை நிரந்திர கொள்முதல் நிலையமாக அமைத்து கொடுத்தால் விவசாயி களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    முன்னதாகவே டி.என்.பாளையம் ஒன்றியத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டி பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×