என் மலர்
நீங்கள் தேடியது "The sea raged"
- கிராம மீனவர்கள், கடந்த 5-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
புதுச்சேரி :
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மறு உத்தரவு வரும் வரைமீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கைபடி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள், கடந்த 5-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை அருகே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதேபோல், காரைக்கால்மேடு, அக்க ம்பேட்டை, கோட்டச்சேரி மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.






