என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the schemes through e service"

    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “இ சேவை” தளம் வழியாக விண்ணப்பங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு "இ சேவை" தளம் வழியாக கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உப கரணங்கள் பெறு வதற்கான விண்ணப்பம், வங்கி கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர உதவி த்தொகை விண்ணப்பங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த சேவைகளை பொது மக்கள்பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspxvdw என்ற இணைய தளம் மூலம் விண்ண ப்பிக்க வேண்டும்.

    இந்த மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணைய தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ×