search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The forest department is serious"

    • கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியிருக்கிறது.
    • மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வரும் யானைகள், குடியிருப்புகளை சேதப்படுத்தி தானியங்களை உட்கொள்வதை உட்பட வழக்கமாக கொண்டிருக்கிறது. பந்தலூர் மக்னா (எம்.பி.-2) என அந்த யானைக்கு பெயரிட்டு, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப் படுத்தியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவாலா வாழைவயல் பகுதிக்குள் நுழைந்து பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து அவரையும் தாக்கி கொன்றது.இதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறும்போது, தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப்பாது காவலர், 4 வனச்சரகர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானையை கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. யானைகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இருவர், கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். யானையை பிடித்து உடல் பரிசோதனை செய்து, மீண்டும் முது மலையில் விடுவிக்கப்படும்" என்றார்.

    வனத்துறையினர் கூறும்போது, நான்கு கண்காணிப்பு குழுவினர்கள் காட்டிமட்டம், நீர்மட்டம், இல்டாப், புளியம் பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டி மட்டம், பராமரிப்பு இல்லாத அக்கார்டு தேயிலை தோட்டப் பகுதியில் மக்னா யானையின் நடமாட்டம் தென்பட்டது. அதனை கண்காணிக்க ஆங்காங்கே தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. தற்போது வரை தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் தான் யானை இருக்கிறது என்றனர்.

    ×