என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the beginning of the festival"

    • தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா தொடங்கியது.
    • வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள காட்டுடை குளத்தில் உள்ளபிரசித்தி பெற்ற தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் 41-ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நேற்று (வியாழக்கிழமை) காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சி யான பங்குனி பொங்கல் விழா மற்றும் தீச்சட்டிகள், பால்குடங்கள், பூ கரகம் எடுக்கும் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

    அன்று கோவில் பூசாரி சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீச்சட்டிகள், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வலம் வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்குவர். வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

    பக்தர்கள் சார்பில் தினமும் மண்டகப் படிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×