என் மலர்
நீங்கள் தேடியது "thavalntha golam"
- தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லை யப்பர் கோவில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லை யப்பர் கோவில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் 9-வது திருநாளில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் டவுனில் 4 ரத வீதிகளிலும் வலம் வரும். அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தவழ்ந்த கோலத்தில் காட்சி
இதற்கிடையே திருவிழா வின் 7-ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் தவழ்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
தொடர்ந்து சப்பரத்தில் சுவாமி அம்பாள் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர். தொடர்ந்து இன்று மாலை யும் அதே தவழ்ந்த கோலத்தில் வெள்ளி வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருகிறார்.






