என் மலர்
நீங்கள் தேடியது "Thava Pavani"
- கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி சிலுவைப்பாதையுடன் தொடங்கியது.
- பவனியை தெற்குகள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்கு தந்தை ஜாண்சன் ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் புனித பாத்திமா திருத்தலத்தில் இருந்து தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பாதம் பதித்த புனித மலைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்கால தவப்பவனி சென்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி சிலுவைப்பாதையுடன் தொடங்கியது. இந்த தவக்கா லத்தில் கிறிஸ்தவர்கள் பல்வேறு ஜெப வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்குகள்ளிகுளம் மற்றும் வள்ளியூர் பங்கு மக்கள் இணைந்து தவக்கால தவப்பவனி சென்றனர்.
இந்த பவனியை தெற்குகள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்கு தந்தை ஜாண்சன் ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர். பவனியில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூர் பங்கு மக்கள், தெற்கு கள்ளிகுளம் பங்கு மக்கள் கலந்துகொண்டனர். பவனி வள்ளியூர் பிரதான சாலை வழியாக ராதாபுரம் சாலை, நேருநர்ஸிங் கல்லூரி சாலை வழியாக வந்தது. நேரு நர்ஸிங் கல்லூரி முன்பு கல்லூரி தலைவர் டி.லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் பவனி மடப்பும், ஆறுபுளி விலக்கு, தட்சண மாறநாடார் சங்க கல்லூரி வழியாக தெற்குகள்ளிகுளம் மலையை சென்றடைந்தது. அங்கு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் அசனவிருந்து வழங்கப்பட்டது. தவப்ப ணிக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் ஜெரால்டு எஸ்.ரவி, ஜாண்சன், தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.






