என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanthontri Amman Temple in"

    • கெட்டி செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா காலை நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கெட்டி செவியூர் தான்தோன்றி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்றது.

    கடந்த 6-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா காலை 8 மணி அளவில் நடைபெற்றது. முதன் முதலில் தலைமை பூசாரி செந்தில்குமார் குண்டத்தில் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது.

    தொடர்ந்து நாளை அம்பாள் தேருக்கு எழுந்தருள் நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 11-ந் தேதி திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு மலர் பல்லக்கில் அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 12-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவை காண கெட்டிசெவியூர், குன்னத்தூர், திருமணநாதம் பாளையம், மாமரத்து பாளையம், தோரணவாவி, கொளப்பலூர், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    ×