என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary firecracker shop"

    • தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • ஆணையை மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மனுதாரர்கள் தங்களது விண்ணப் பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் புலவரைப்படம், கிரையப் பத்திரம், முகவரிக்கான ஆதாரம் (ஆதார் அட்டை, குடும்ப அட்டை),

    சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் 0070-60-109-AA-22738 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக ரூ.600 செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் 19-ந் ேததி முடிய விண்ணப்பம் செய்யலாம்.

    இக்குறிப்பிட்ட காலகெடு விற்குப்பின் அதாவது 19-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    ×